‘காதல்’ சுகுமார் இயக்கும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் ’பட்டதாரி’ புகழ் அபி சரவணன் நடிக்கும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

செய்திகள் 7-Feb-2017 3:53 PM IST VRC கருத்துக்கள்

‘காதல்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் ‘காதல்’ சுகுமார். இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதிலும் களம் இறங்கி ‘திருட்டு விசிடி’, ‘சும்மாவே ஆடுவோம்’ என்று இரண்டு படங்களை இயக்கினார். இப்போது தனது மூன்றாவது படமாக ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது.

இந்த படத்தில் ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அபி சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விஷ்ணுப்ரியன், காதல் சுகுமாரும் நடிக்க கதாநாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா ஆகியோர் நடிக்கிறார்கள். ‘புறம்போக்கு’ படத்திற்கு இசை அமைத்த வர்ஷன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ஜீன்ஸன் லோனப்பன் கவனிக்கிறார்.

வாழ்க்கையில் அடுத்தடுத்து மிகப் பெரிய இழப்புகளை சந்திக்கும் ஒருவன் அதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பது தான் இந்த படத்தின் கதையாம். கேரளாவில் ஆரம்பித்து கோவையில் முடியும் இந்த படத்தின் கதை 7 நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாக இருக்கிறது. ‘காதல்’ சுகுமாரின் சொந்த பட நிறுவனமான ‘காதல் ஸ்டுடியோஸு’டன் ‘கே.யூ.தேவர் ஃபிலிம்ஸி’ன் சாய் சரவணன் மற்றும் ‘பாரம்பரியம் மூவீஸி’ன் விஜய் ஆனந்த் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

#9GiragankalumUchamPetravan #KadhalSukumar #AbhiSaravanan #Vishnupriyan #KannikaRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;