‘பலூனி’ல் கை கோரக்கும் 5 முன்னணி ஹீரோக்கள்!

ஜெய், அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ பட விளம்பரத்தில் கை கோர்க்கும் 5 முன்னணி ஹீரோக்கள்!

செய்திகள் 14-Feb-2017 3:48 PM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதில் புதிய புதிய யுக்திகளை, முயற்சிகளி கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜெய், அஞ்சலி, ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘பலூன்’ திரைப்படத்தின் 5 போஸ்டர்களை தமிழ் சினிமாவை சேர்ந்த 5 முன்னணி நடிகர்கள் வெளியிட இருக்கிறார்கள். ஆனால் அந்த முன்னணி நடிகர்கள் யார் யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த 5 போஸ்டர்களில் முதல் போஸ்டர் ஃபிப்ரவரி 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து தினமும் ஒவ்வொரு போஸ்டர் வெளியாகவிருக்கிறது. ஃபிப்ரவரி 19ஆம் தேதி கடைசியாக வெளியாகும் ஐந்தாவது போஸ்டரில் படத்தின் டீஸர் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்குமாம். இந்த புதிய முயற்சி மூலம் தங்களது ‘பலூன்’ திரைப்படத்திற்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ‘பலூன்’ படக்குழுவினர்.

‘70 எம்.எம்.’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண்பாலாஜி, கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சினீஷ் இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ‘யோகி’ பாபுவும் நடித்துள்ளார்.

#Baloon #Jai #Anjali #JananiIyer #70MMProduction #TNArunBalaji #KandaswamyNandhakumar #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;