‘‘சென்னையின் பெருமையை ‘மாநகரம்’ பேசும்!’’ ஹீரோ சந்தீப்

சென்னையின் பெருமையை பேசவரும் ‘மாநகரம்’ திரைபப்டம்!

கட்டுரை 25-Feb-2017 1:07 PM IST VRC கருத்துக்கள்

‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்த படம் நயன்தாரா நடித்த ‘மாயா’. இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘மாநகரம்’. மார்ச்10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் சந்தீப், ஸ்ரீ, ரெஜினா கெசன்ட்ரா, சார்லி, முனீஸ் காந்த் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சந்தீப் பேசும்போது,

‘‘எல்லோரும் தமிழுக்கு நான் மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் சென்னை பையன். என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில் தான் உள்ளது. என்னுடைய அம்மா, அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே தான் இருக்கிறார்கள். நான் வேலை பார்ப்பது ஹைதராபாத்தில்! நான் survival-லுக்காக தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். ஆனால் தமிழில் நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். இப்போது நான் நடித்துள்ள ‘மாநகரம்’ அடுத்து வரவிருக்கும் ‘மாயவன்’ ஆகிய படங்கள் நிச்சயம் அனைவரையும் கவரும். ஒரு புதுமையான படைப்பாக ‘மாநகரம்’ இருக்கும். நான் நேற்று தான் ‘மாநகரம்’ படத்தை பார்த்தேன். இது, சென்னையின் பெருமையை பற்றி பேசும் படமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது சென்னையை பற்றி பெருமையாக எண்ணுவீர்கள்! எனக்கு இங்கே உள்ள உண்மையான நண்பர்களில் மிகச்சிறந்த நண்பர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்னபோது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் தயாரிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். நம்மிடம் பணம் இல்லையே எப்படி தயாரிக்கப் போகிறோம் என்று யோசித்துகொண்டு இருந்த போது தான் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தயாரிக்க முன் வந்த தகவலை சொன்னார். அதனால் நான் தப்பித்துவிட்டேன்’’ என்றார்.

நடிகர் ஸ்ரீ பேசும்போது, ‘‘இதுவரை நான் நடித்த அனைத்து படங்களுக்கும் நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இந்த திரைப்படத்துக்கும் நீங்கள் அதே போல் ஆதரவை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ‘மாநகரம்’ திரைப்படத்தை பார்த்தப் பிறகு படத்தின் கதை சார்ந்த முக்கிய விஷயங்களை வெளியே யாரிடமும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ‘‘மாநகரம்’ திரைப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். எப்போதும் எங்கள் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் ‘மாநகரம்’ திரைப்படத்திற்கும் கொடுக்க வேண்டும். படத்தை அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்து பைரசியை ஒழிக்க உதவ வேண்டும். காதலில் காத்திருப்பது மகிழ்ச்சியான தருணம். ஆனால் சினிமாவில் காத்திருப்பது அப்படி அல்ல! அது பெரும் வலியை தரும் விஷயம்’’ என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ‘‘இதுவரை ‘மாநகரம்’ திரைப்படத்தை பார்த்த அனைவரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. படத்தை பார்த்த பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் வெளியிட்ட விமர்சனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அவர் அதை வெளியிட்டதை தொடர்ந்து பிரபலங்கள் பலர் எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். வருகிற 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘மாநகரம்’ திரைப்படம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும்’’ என்றார்.

’மாநகரம்’ படத்திற்கு அறிமுக ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசை அமைப்பாளர் ஜாவித் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை அறிமுகம் ஃபிலோமின் கவனித்துள்ளார்.

#Maanagram #PotentialStudios #Sundeep #Shri #ReginaCassandra #JavedRiaz #Selvakumar #LokeshKanagaraj #SRPrabhu #SRPrakashbabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;