300-க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘குற்றம்-23’

அருண் விஜய்யின் ‘குற்றம்-23’  முன்னூறுக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது!

செய்திகள் 27-Feb-2017 10:42 AM IST VRC கருத்துக்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், மகிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள படம் ‘குற்றம்-23’. ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலின் அடிப்படையில் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 3-ஆம் தேதி ரிலீசாகிறது. ‘ரெதான்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுக்க பிரபு வெங்கடாசலத்தின் ’ACROSS FILMS’ நிறுவனம் வெளியிடுகிறது. தமிழகம் முழுக்க இந்த படம் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறதாம். இதனை இப்படம் சம்பந்தமாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த படத்தின் அருண் விஜய், மகிமா நம்பியாருடன் விஜய்குமார், அபிநயா, அமித் பார்கவ், வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ், சுஜா வருணி, நீலிமா ராணி, ஜெயலட்சுமி, கல்யாணி நடராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

#Arivazhagan #Kuttram23 #RajeshKumar #ArunVijay #MahimaNambiar #InderKumar #RethanProductions #Vijayakumar #Abhinaya #VishalChandrashekar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;