ஐஸ்வர்யா ராஜேஷ், நிகிலா விமலை தொடர்ந்து சிபிராஜுடன் இணையும் ஐஸ்வர்யா தத்தா!

விளம்பர பட இயக்குனர் இயக்கும் படத்தில் இணையும் சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா தத்தா!

செய்திகள் 16-Mar-2017 12:09 PM IST VRC கருத்துக்கள்

சிபி சத்யராஜின் ‘கட்டப்பாவை காணோம்’ திரைப்படம் நாளை ரிலீசாகிறது. இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ண்மூர்த்தி இயக்கும் ‘சத்யா’வில் நடித்து வருகிறார் சிபி சத்யராஜ்! இந்த பங்கள் தவிர மேலும் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சிபி சத்யராஜ்! இதில் ஒன்று இயக்குனர் V.Z .துரையிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும், விளம்பர பட இயக்குனருமான வினோத் இயக்கும் படம். இந்த படத்தில் சிபிராஜுடன் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார். ‘பாஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கும் இப்படம் அதிரடி கலந்த த்ரில்லர் படமாம்! இதற்கு அடுத்து அறிமுக இயக்குனர் அன்பு இயக்கும் படம்! இந்த படத்தில் சிபிராஜுடன் கதாநாயகியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படப் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Sibiraj #KattapaavaKaanom #PradeepKrishnamoorthy #Sathya #NikilaVimal #Vinod #AishwaryaDutta #Anbu #TamizhukkuEnOndraiAzhuthavum

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டீசர்


;