மீண்டும் இணையும் ‘மாநகரம்’ வெற்றிப்பட கூட்டணி!

எஸ்.ஆர்.பிரபுவுடன் மீண்டும் இணையும் ‘மாநகரம்’ இயக்குனர்!

செய்திகள் 16-Mar-2017 3:55 PM IST VRC கருத்துக்கள்

‘மாயா’ என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும், எஸ்.ஆர்.பிரபுவும் இணைந்து தயாரித்த படம் ‘மாநகரம்’. அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பத்திரைகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்த ‘மாநகரம்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தையும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Maanagaram #LokeshKanagaraj #SRPrakash #SRPrakashBabu #PotentialStudios #Maya #Nayanthara #SundeepKishan #ReginaCassandra #Shri #Munishkanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;