8 மணி நேரத்தில் ஒரு கோடி... ‘பாகுபலி 2’வின் ‘அம்மாடியோவ்....’ ரெக்கார்டு!

‘பாகுபலி 2’ படத்தின் தெலுங்கு டிரைலர் மிகப்பெரிய சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறது

செய்திகள் 16-Mar-2017 5:45 PM IST RM கருத்துக்கள்

மாபெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் 2ஆம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மனதிற்குள் எப்படி விதைக்க வேண்டும் என பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம். இப்படத்தின் டிரைலரை இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தது ‘பாகுபலி 2’ டீம். ஆனால், எதிர்பாராதவிதமாக படத்தின் டிரைலர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகவே, உடனடியாக சுதாரித்த ராஜமௌலி இன்று காலை 10 மணிவாக்கில் அதிகாரபூர்வமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி டிரைலர்களை யு ட்யூபில் களமிறக்கியது.

படத்தின் டிரைலர் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் ஆச்சரியங்களை அடுக்கி வைத்திருந்ததால், யு ட்யூபே அதிரும் அளவுக்கு ‘பாகுபலி 2’ டிரைலர் உலகெங்கும் உள்ள இந்திய ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. தெலுங்கு டிரைலர் வெளியான 8 மணி நேரத்திற்குள்ளாகவே, 1 கோடி முறை பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை ஒன்றை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்பட டிரைலரே 1 கோடி பார்வையிடல்களை அதிவிரைவில் எட்டிய சாதனையைப் படைத்திருந்தது. ஆம்... அந்த டிரைலர் 24 மணிநேரத்தில் இச்சாதனையைச் செய்தது. ஆனால், வெறும் 8 மணி நேரத்திலேயே இந்த ரெக்கார்டை அடித்து நொறுக்கியிருக்கிறது ‘பாகுபலி 2’ தெலுங்கு டிரைலர். இதன் ஹிந்தி டிரைலர் 8 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையிடல்களையும், தமிழ் டிரைலர் 13 லட்சம் பார்வையிடல்களையும் பெற்றிப்பது குறிப்பிடத்தது.#Baahubali2TheConclusion #Prabhas #RanaDaggubati #Anushka #Tamannah #Sathyaraj #RamyaKrishnan #SSRajamouli #Naaser #Keeravani #ArkaMediaWorks #Baahubali2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்


;