சசிகுமாரின் அடுத்த படத்தில் ஹன்சிகா மோத்வானி?

சசிகுமாரை நாயகனாக்கி முத்தையா இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்

செய்திகள் 17-Mar-2017 10:17 AM IST Chandru கருத்துக்கள்

பி அன்ட் சியில் வெற்றிக்கொடி நாட்டிய ‘குட்டிப்புலி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சசிகுமார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கொடிவீரன்’ எனப் பெயரிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இயக்குனர் முத்தையா தனது பாணியிலேயே இப்படத்தையும் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியிலேயே உருவாக்கவிருக்கிறாராம். இதற்காக தற்போது சிவகங்கை உள்ளிட்ட கிராமப்புறங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்குத் தோதான இடங்களை தேர்வு செய்து வருகிறாராம் முத்தையா.

இந்நிலையில், இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் மாடர்ன் கேரக்டர்களிலேயே நடித்துவரும் ஹன்சிகா, முத்தையாவின் புழுதிக்காட்டில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

#Kuttipuli #Sasikumar #Muthaiah #Kodiveeran #Sivagangai #HansikaMotwani #Aranmanai #Kidaari #BaleVellaitheva #Komban

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரவதம் - ட்ரைலர்


;