நாளை காத்திருக்கிறது ‘அஸ்வின் தாத்தா’வின் ஆச்சரியம்!

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் புதிய டீஸர் ஒன்று நாளை வெளிவரவிருக்கிறது.

செய்திகள் 17-Mar-2017 10:33 AM IST Chandru கருத்துக்கள்

‘மதுரை மைக்கேலா’க ரசிகர்களை குஷிப்படுத்திய சிம்புவின் அடுத்த அவதாரமான ‘அஸ்வின் தாத்தா’ கேரக்டர் பற்றிய சிறிய டீஸர் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சிம்பு மூன்று கேரக்டர்களில் நடிக்கவிருப்பதும், அதில் இரண்டு கேரக்டர்கள் குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருப்பதும் நமக்குத் தெரியும். மூன்றாவது கேரக்டர் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதே சிம்பு ரசிகர்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அதோடு, மதுரை மைக்கேலுக்கு ஸ்ரேயா, அஸ்வின் தாத்தாவிற்கு தமன்னா என்பதைப்போல அந்த மூன்றாவது கேரக்டரின் ஜோடி யாராக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், நாளை அஸ்வின் தாத்தாவின் முழு டீஸர் ஒன்று வெளிவரவிருக்கிறது. இந்த டீஸரில் மேலே கூறப்பட்ட கேள்விகளுக்கு விடைகிடைக்குமா என்பது தெரிந்துவிடும்.

#STR #AnbanavanAsaradhavanAdangadhavan #AshwinThatha #AadhikRavichandran #Shriya #YuvanShankarraja #Tamannah #MottaRajendiran #AAA #Mahat #VTVGanesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;