மறைந்த நடிகை இந்திரா தேவிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி!

மறைந்த நடிகை இந்திரா தேவிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி!

செய்திகள் 17-Mar-2017 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவரும், ஜெமினி கணேசன் நடித்த ‘சுமை தாங்கி’ படத்தில் அவருக்கு ஜோடியாக, ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் எம்.என். நம்பியார் ஜோடியாக மற்றும் ‘கந்தன் கருணை’, ‘எங்க மாமா’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘திருடாதே’, ‘சிந்து பைரவி’ உட்பட 250 படங்களுக்கும் மேல் நடித்தவர் இந்திரா தேவி. அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 70 வயதான இந்திரா தேவி கடைசியாக நடித்த படம் ‘கிரிவலம்’. இந்த படத்தில் ரிச்சர்ட்டின் பாட்டியாக நடித்திருந்தார் இந்திரா தேவி!

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகள் பெற்ற இந்திரா தேவி பிரபல டப்பிங் கலைஞர் அனுராதாவின் அக்கா அவார். அதைப் போல இந்திரா தேவியின் மகள் ஜெயகீதாவும் பிரபல டப்பிங் கலைஞர் ஆவார். இந்திரா தேவியின் கணவர் பெயர் சங்கர நாராயணன். இவரது வீடு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கிறது. இந்திரா தேவியின் திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் இந்திராதேவியின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்திரா தேவியின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாகும்.

#IndraDevi #Vishal #Ponvannan #KonjumKumari #GeminiGanesan #Sumaithangi #EngaMama

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;