மீண்டும் ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே?

ராதிகா ஆப்தே, எமி ஜாக்சனை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!

செய்திகள் 17-Mar-2017 11:19 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து முடித்த கையோடு ரஜினி அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். ‘கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியும், ரஞ்சித்தும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறதாம்! தனுஷின் ‘வுண்டர் பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் வித்யா பாலன் இப்படத்தில் நடிக்கவில்லையாம். இப்போது ஏற்கெனவே ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்த தீபிகா படுகோனேயிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள் என்றும், அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. ஆனால் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Rajinikanth #Ranjith #Kabali #DeepikaPadukone #Kochadaiiyaan #ChennaiExpress #Rana #WunderbarFilms #Endhiran2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;