கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘காற்று வெளியிடை’ படம் குறித்த அதிகார்பூர்வ தகவல்கள்!

செய்திகள் 18-Mar-2017 11:10 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னமும், கார்த்தியும் இணைந்துள்ள ‘காற்றுவெளியிடை’ படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் நாளை மறுநாள் (மார்ச்-20) வெளியாகவிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். ‘காற்றுவெளியிடை’ ஏப்ரல் 7-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. தெலுங்கில் ‘செலியா’ என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் தமிழில் வெளியாகும் நாளிலிருந்து ஒரு நாள் தள்ளி 21ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கோடை விடுமுறை ‘ட்ரீட்’டாக வரவிருக்கும் ‘காற்றுவெளியிடை’ படத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி முதலானோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹம்மன் இசை அமைத்துள்ளார். ரவிவர்மன ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

#KaatruVeliyidai #Cheliya #Karthi #Maniratnam #ARRahman #Vairamuthu #MadhanKarky #AditiRaoHydari #Ravivarman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்குரி ட்ரைலர்


;