புரூஸ்லீ - விமர்சனம்

ஏமாற்றம்!

விமர்சனம் 18-Mar-2017 11:16 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Prashanth Pandiraj
Production : Kenanya Films, PK Film Factory
Starring : G.V. Prakash Kumar, Kriti Kharbanda
Music : G. V. Prakash Kumar
Cinematography : P. V. Shankar
Editing : Pradeep E. Ragav, G. Manoj Gyann

இயக்குனர் பாண்டிராஜின் சிஷ்யர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘புரூஸ்லீ’யின் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

புரூஸ்லீ என்று அழைக்கப்படும் ஜி.வி.பிரகாஷ் பயந்த சுபாவம் கொண்டவர்! இவர் ஒரு நாள், அரசியல்வாதியான மனசூரலிகானை காட்ஃபாதர் என்று அழைக்கப்படும் தாதாவான முனிஷ்காந்த் கொலை செய்வதை படம் பிடித்து விடுகிறார். இதனால் சில பிரச்சனைகள் வர, புரூஸ்லீ அந்த கேமராவை கூவம் ஆற்றுக்குள் தூக்கி எறிந்து விடுகிறார். இந்நிலையில் முனிஷ்காந்த், ஜி.வி.பிரகாஷின் காதலி கீர்த்தி கர்பந்தாவையும், ஜி,.வி.பிரகாஷின் நண்பர் பாலசரவணனின் காதலி சாதிகாவையும் கடத்தி வைத்து, அந்த கேமராவுக்கு பேரம் பேசுகிறார். இதற்கு அடுத்து நடக்கும் ‘ஆடு புலி’ ஆட்டம் தான் புரூஸ்லீ!

படம் பற்றிய அலசல்

ஜி.வி.பிரகாஷையும், பாலசரவணனையும் வைத்து ஒரு காமெடி படம் தரவேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். ஆனால் அதற்கு தோதான ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்காமல் அரதப்பழசான ஒரு கதையையும் காட்சிகளையும் அமைத்து ரசிகர்களை பெரிதும் சோதிக்கும் விதமாகவே இப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் ஜி..வி.பிரகாஷ் நடித்து வெளியான படங்களில் அவரது காமெடியையும், வித்தியாசமான பங்களிப்பையும் ரசித்தவர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றத்தையே தரும். ஓரளவுக்கு ரசிக்கும் வகையில் அமைந்திருப்பது பாலசரவணன் மற்றும் முனிஷ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும்தான் தான்! எந்த ஜானர் படமானாலும் அதில் ‘கேரக்டர் டீட்டெயிலிங்’ இருக்க வேண்டும். அது இப்படத்தில் சுத்தமாக இல்லை! தொழில்நுட்ப விஷயங்களை பொறுத்தவரையில் பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ஒரு சில இடங்களில் வரும் பின்னணி இசை தவிர்த்து, ஜி.வி.பிரகாஷின் இசை கூட இப்படத்திற்கு கை கொடுக்கவில்லை. இப்படி நிறைய மைனஸுகளுடன் அமைந்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டிராஜ், இயக்குனர் பாண்டிராஜிடம் பாடம் பயின்றவர் தானா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது!

நடிகர்களின் பங்களிப்பு!

ஜி.வி.பிரகாஷ் குமார், பாலசரவணன் ஆகியோர் தங்களது வழக்கமான பாணி நடிப்பை மட்டுமே வழங்கியுள்ளனர். குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை. அழகான கீர்த்தி கர்பந்தா இளைஞர்களின் இதயங்களைத் திருடும் விதமாக சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாமல், விதவிதமான வேடங்களில் வந்து வில்லத்தனம் செய்யும் முனிஷ்காந்த் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆனந்தராஜ், அரசியல்வாதியாக வரும் மனசூரலிகான், ‘டம்மி’ தாதாவாக வரும் ‘மொட்டை’ ராஜேந்திரன் இப்படி படத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பலம்

1. ஒளிப்பதிவு
2. ஒரு சில இடங்களில் வரும் பின்னணி இசை

பலவீனம்

1 .கதை, திரைக்கதை
2. நடிகர்களின் பங்களிப்பு

மொத்தத்தில்...

ஒரு அறிமுக இயக்குனரை பொறுத்தவரையில் தனது முதல் படைப்பில் ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் ரசிகர்களை கவர முயற்சித்திருப்பார். ஆனால் இந்த படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டிராஜ் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது!

ஒரு வரி பஞ்ச் : ஏமாற்றம்!

ரேட்டிங் : 3/10

#BruceLeeMovieReview #BruceLee #GVPrakashKumar #PrashanthPandiraj #KritiKharbanda #Shankar #ManojGyann #KenanyaFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குப்பத்து ராஜா - டீசர்


;