‘ஈராஸ்’ நிறுவனத்திற்கு சல்மான்கானும், ஆடும் ஒன்று தான்!

ஆடு முக்கிய பாத்திரத்தில் வரும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

செய்திகள் 18-Mar-2017 12:05 PM IST Top 10 கருத்துக்கள்

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டனிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சாங்கையா இயக்கியிருக்கும் படம் ‘ஒரு ‘கிடாயின் கருணை மனு’. இந்த படத்தை பிரபல ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. விதார்த், புதுமுகம் ரவீணா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஒரு ஆடும் வருகிறது. அறிமுக இசை அமைப்பாளர் ரகுராம் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படம் குறித்து நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் பேசும்போது,
‘‘இந்த படத்தை தயாரித்திருக்கும் ஈராஸ் நிறுவனம் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஜான் ஆப்ரகாம், பவன் கல்யாண் போன்ற பல பெரிய நடிகர்களை வைத்து மிகப் பிரம்மாண்டமான படங்களை தயாரித்த பெரிய தயாரிப்பு நிறுவனம். அப்படியிருக்க, ஒரு ஆடு முக்கிய கதாபாத்திரமாக நடித்த இந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை தயாரிக்கவும் முன் வந்திருப்பதை பார்க்கும்போது அவர்கள் நடிகர்களை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அதாவது இந்த நிறுவனத்தை பொறுத்தவரியில் சல்மான்கானும், ஆடும் ஒன்று தான் என்று தான் சொல்ல வேண்டும்! கதை தான் முக்கியம் என்பதை அவர்கள் நம்புவதால் தான் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள். ஏற்கெனவே ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற ஒரு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது அந்த வரிசையில் ஆடு இடம்பெறும் இந்த படமும் மிகப் பெரிய வெற்றியை பெறுவம் என்பது என் நம்பிக்கை’’ என்றார்.
அதனை தொடர்ந்து நாசர் ஆடியோவை வெளியிட, இயக்குனர் பிரபு சால்மன் பெற்றுக்கொண்டார். இந்த படத்தில் விதார்த், ரவீணாவுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை ஆர்.வி.சரண் கவனிக்க, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.


#OruKidayinKarunaiManu #Vidharth #Raveena #ErosInternational #KLPraveen #PrabhuSolomon #Naaser

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;