கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசனுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி!

கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசனுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி!

செய்திகள் 20-Mar-2017 10:45 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இடர்நேஷனல் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவருமான சந்திரஹாசன் நேற்று முன் தினம் இரவு லண்டனில் காலமானார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்புகளில் பெரும் பங்கு வகித்த இவர் கடந்த சில நாட்களாக லண்டனில் தன் மகள் அனுஹாசனுடன் வசித்து வந்தார். ஒரு சில மாதங்களுக்கு முன் தான் இவரது மனைவி காலமானார். இதனை தொடர்ந்து மகள் அனுஹாசனுடன் லண்டனில் வசித்து வந்த இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், ‘‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் கமல்ஹாசனின் இரண்டாவது சகோதரர் சந்திரஹாசன் மரணமடைந்தார் என்பதை கேட்டு வேதனை அடைந்தோம். பால்ய காலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் சந்திரஹாசன். எனவே தான் அவரை தனது முத்த சகோதரர் என்று இல்லாமல் அப்பா என்றே எப்போதும் குறுப்பிடுவார் கமல்ஹாசன் அவர்கள்! அப்பேற்பட்ட அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் கமல்ஹாசனின் முத்த சகோதரர் சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனது சகோதரர் சந்திரஹாசன் மறைவு குறித்து நடிகர் கம்லஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘நண்பனாய், நல் ஆசானாய், தமையனுமாய், தகப்பனுமாய், அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியை கூட நான் நிறைவேற்றவில்லை’’ என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன்னின் அண்ணன் சந்திரஹாசனின் இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டும் அல்ல; தமிழ் சினிமாவுக்கே பெரும் இழப்பாகும்!

#Chandrahasan #KamaHaasan #AnuHaasan #Charuhaasan #Suhasini #ShrutiHaasan #AksharaHaasan #Kamal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;