’காற்று வெளியிடை’யில் கார்த்தியின் புதிய அனுபவம்!

காற்று வெளியிடை படப்பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்!

செய்திகள் 20-Mar-2017 2:46 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் முதலானோர் நடித்து ஏ.ஆர்.ரஹமான் இசை அமைத்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சற்று முன் சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் உள்ள சீஸன் தியேட்டரில் நடைபெற்றது. பாடல் சி.டி.யை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து கார்த்தி பேசும்போது,

‘‘இது எனது கனவு படம் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும்! காரணம் எல்லோருக்கும் மணி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய எனக்கும் அந்த வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளது. மணி சார் உருவாக்கிய இந்த ஸ்கிரிப்டை படித்தப்போது சர்ப்ரைசாக இருந்தது.அதே நேரம் என்னால் இந்த ஸ்கிரிப்ட்டில், இந்த கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகமும் வந்தது. இந்த கதையில் வரும் ஃபைட்டர் பைலட் வருண் என்ற கதாபாத்திரம் சாதாரணமானது அல்ல! இதை உண்மையிலேயே நான் பண்ணணுமா என்று மணி சாரிடம் கேட்டேன்! மீசை எடுக்கணும், வெயிட் குறைக்கணும் என்று சொல்லி வேறு பயமுறுத்தினார்! செய்து பார்ப்போம் என்று களத்தில் இறங்கினோம். ஆனால் அந்த ஃபைட்டர் பைலட் என்ற விஷயம் புதுமையாக இருந்தது. அதை தெரிந்துகொள்ள ஒரு பைலட் கூட டிராவல் பண்ணி நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். மணி சாரும் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். மணி சார் இயக்கத்தில் இந்த படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஏர் ஃபோர்ஸ் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதை தான் இது! அதற்காக மணி சார் இயக்கிய ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’ போன்ற படங்களை நினைவில் வைத்து கொண்டு இந்த படத்திற்கு வராதீர்கள்! இது மணி சாரின் வேறுவிதமான ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி படம்! உங்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் தரும் ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும்’’ என்றார். இவரை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், மதன் கார்க்கி ஆகியோரும் பேசினார்கள்.

விழாவில் சிறப்பு அம்சமாக விமானப்படையில் பணிபுரிந்து பல சாதனைகள் புரிந்து ஓயவு பெற்ற சிம்மக்குட்டி வர்தமான் என்பவரை மேடைக்கு அழைத்து கௌரவம் செய்தனர். இந்த படத்திற்காக அவர் நிறைய உதவிகள் செய்ததை குறிப்பிட்டு இயக்குனர் மணிரத்னம் பேசி அவருக்கு உரிய மரியாதை செய்தார்.

#KaatruVeliyidaiAudioLaunch #KaatruVeliyidai #Karthi #AditiRaoHydari #Suriya #ManiRatnam #ARRahman #MadrasTalkies #Vairamuthu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கல்யாண வயசு - கோலமாவு கோகிலா


;