இந்த வார ரிலீஸ் களத்தில் 11 திரைப்படங்கள்!

எப்போதும் இல்லாத அளவில் இந்த வாரம் 11 திரைப்படங்கள் ரிலீசாவதாக அறிவிப்பு!

செய்திகள் 21-Mar-2017 1:31 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்போது வாரத்துக்கு நான்கைந்து திரைப் படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதில் எத்தனை படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று அப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்ட முதலீடு திரும்ப கிடைக்கிறது என்பது தெரியாது! அந்த வரிசையில் இந்த வாரம் 13 திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் ‘ஒரு கனவு போல’ மற்றும் ‘ஆக்கம்’ ஆகிய படங்கள் இந்த வார ரிலீசிலிருந்து பின்
வாங்கியதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு படங்கள் தவிர்த்து விஜய் மில்டன் இயக்கத்தில் பரத், இயக்குனர் ராஜகுமாரன் நடித்துள்ள ‘கடுகு’, ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் ஆர்.கே.நடித்து, தயாரித்துள்ள ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘நட்டி’ நட்ராஜ் நடித்து ராமு செல்லப்பா இயக்கியுள்ள ‘எங்கிட்ட மோதாதே’, ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பாம்பு சட்டை’, சுரேஷ் குமார் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள ‘இவன் யாரென்று தெரிகிறதா’, ராகுல் இயக்கியுள்ள ‘1.A.M.’, குமார் மாறன் இயக்கியுள்ள ‘அரசகுலம்’, சாய் சத்யம் இயக்கியுள்ள ‘465’, கண்ணன் ரங்கசாமி இயக்கியுள்ள ‘தாயம்’, சதீஷ் ஆர்.வி. இயக்கியுள்ள ‘ஜூலியும் நாலு பேரும்’, சாம்ராஜ் இயக்கியுள்ள ‘சாந்தன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் களத்தில் உள்ளன! இதில் எத்தனை படங்கள் ரிலீசாகும், எத்தனை படங்கள் ரிலீஸ் களத்தில் இருந்து பின் வாங்கும் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிந்து விடும்!

#Kadugu #EnkittaModhathe #465 #Paambusattai #1AM #Arasakulam #Dhayam #Julieum4perum #VaigaiExpress #Santhan #Aakkam #OruKanavuPola

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

1 AM - வீடியோ


;