பாட்ஷாவை தொடர்ந்து கமலின் 'வெற்றி விழா'

கமல், பிரபு இணைந்து நடித்த வெள்ளிவிழா திரைப்படம் புதிய தொழில் நுட்பத்தில் திரைக்கு மீண்டும் வருகிறது

செய்திகள் 29-Mar-2017 4:11 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் புதிய தொழில் நுட்ப உதவியுடன் டிஜிட்டல் வடிவில் வெளியாகி புதிதாக வரும் திரைப்படத்திற்கு இணையாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் வெளியான 'பாட்ஷா' திரைப்படம்.

அதேபோல் கடந்த 1989 -ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பெரும் வெற்றிபெற்ற 'வெற்றி விழா' திரைப்படம் தற்போது டிஜிட்டல் வடிவில் உருவாகி ரிலீசுக்கு தயாராகிவருகிறது. சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் பிரதாப் போத்தன் இயக்கியிருந்த அப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆக்க்ஷன் திரில்லர் கதையமைப்பில் உருவான இப்படம் கமல் - பிரபு ரசிகர்களிடம் அந்த காலத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.

டிஜிட்டல் வடிவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மீண்டும் அதே போல ஒரு வெற்றி பெரும் என்று நம்பிக்கையோடு படக்குழுவினர் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

#Baasha #VetriVizha #Rajinikanth #KamalHaasan #Prabhu #Khusboo #Amala #Ilayaraja #PrathapPothan #SivajiProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;