‘சிலந்தி’ படத்தை தொடர்ந்து ‘சிலந்தி-2’

‘சிலந்தி’ படத்தை தொடர்ந்து ஆதிராஜன் இயக்கும் படம் ‘சிலந்தி-2’

செய்திகள் 15-Apr-2017 10:10 AM IST VRC கருத்துக்கள்

‘சில்ந்தி’ படத்தை எழுதி, இயக்கிய ஆதிராஜன் அடுத்து இயக்கும் படம் ‘சிலந்தி-2’. இந்த படத்தில் கன்னடத்தில் பிரபலமான நடிகரான விஜயராகவேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘சிறுத்தை’ படப் புகழ் மேக்னா நாயுடு, ஐஸ்வர்யா விஷால் ஹெக்டே, சத்யஜித் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையுய்ம் காற்றில் பறக்கவிட்டு சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகலை சொல்லும் படமாம் ‘சிலந்தி-2’. இந்த படத்திற்கு பெ.கார்த்திக் இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

#Silandhi2 #Aadhirajan #Silandhi #VijayaRagavendhira #MeghnaNaidu #AishwaryaVishal #Sathyajit

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;