13-வது ஹீரோ அஸ்வின்! ‘திரி’ கொளுத்தும் இயக்குனர் அசோக் அமிர்தராஜ்!

கல்லூரிகளில் நடக்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் படம் ‘திரி’

செய்திகள் 18-Apr-2017 11:36 AM IST VRC கருத்துக்கள்

அஸ்வின், சுவாதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘திரி’. அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அஜிஸ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பாம்புச்சட்டை’ படத்திற்கு இசை அமைத்த அஜிஸ் இசை அமைக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் அசோக் அமிர்தராஜ் படம் குறித்து பேசும்போது,

‘‘நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை! கோடம்பாகத்தில் பிறந்து வளர்ந்து, சினிமா பார்த்து, சினிமா பற்றி கற்றுக்கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். வெளியாகும் அனைத்து படங்களியும் பார்ப்பேன். அப்படி பார்த்த படங்களிலிருந்து மாறுபட்டு இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன். தந்தை- மகன் உறவு, கல்லூரியில் நடக்கின்ற தவறுகள் ஆகிய விஷயங்களை மையமாக வைத்து ‘திரி’ கதையை அமைத்திருக்கிறேன். இந்த கதையை நான் 12 ஹீரோக்களிடம் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் கதையை கேட்டு, ‘கதை நன்றாக இருக்கிறது, யார் இயக்குனர்?’ என்று கேட்பார்கள்! நான் தான் இயக்கப் போகிறேன் என்று சொல்வேன்! ஆனால் இயக்குனராக என்னை யாரும் நம்பவில்லை! கடைசியில் அஸ்வினிடம் கதை சொன்னேன். அவர் உடனே என்னை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படி அமைந்த 13-வது ஹீரோ தான் அஸ்வின்’’ என்றார்.

சென்சார் முடிந்து ‘U’ சர்டிஃபிக்கெட் வாங்கியிருக்கும் இந்த படத்தில் அஸ்வின், ஸ்வாதியுடன் ஜெயபிரகாஷ், ஏ.எல்.அழகப்பன், கருணாகரன், சென்ட்ராயன், டேனியல் பாலாஜி, சேரன்ராஜ், அனுபமா குமார், பாண்டு, அர்ஜெய் ஆகியோரும் நடித்துள்ளனர். பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய ஆர்.பி.பாலகோபி மற்றும் ஏ.கே.பாலமுருகன் இருவரும் இணைந்து ‘SEA SHORE GOLD PRODUCTION’ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#ThiriAudioLaunch #Ashwin #SwathiReddy #Jayaprakash #Sendrayan #RaghunathanPS #ThalapathiDinesh #Thiri

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;