உதயநிதி ஸ்டாலினின் ’சரவணன் இருக்க பயமேன்’ சென்சார் ரிசல்ட்?

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 20-Apr-2017 4:39 PM IST VRC கருத்துக்கள்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டலின், ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இந்த படம் மே 12-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற்று சென்சார் குழுவினர் படத்திற்கு ‘U‘ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து எழில் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினாவுடன் சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, மன்சூரலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைக்க, ஒளிப்பதிவை கே.ஜிவெங்கடேஷ் கவனித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. எழிலும், உதயநிதி ஸ்டாலினும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படமும் காமெடி ஜானர் படமாக உருவாகியுள்ளதாம்.

#SaravananIrukkaBayamaen #Ezhil #UdhayanidhiStalin #ReginaCassandra #Soori #SrustiDonge #DImman #RedGiantMovies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;