மாதவனுக்கு ‘மின்னலே’, விஷாலுக்கு ‘சத்யம்’, ஜெயம் ரவிக்கு ‘வனமகன்’!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்!

செய்திகள் 22-Apr-2017 10:40 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளிவந்த ‘கடம்பன்’ படத்தைத் தொடர்ந்து, ‘வனமகன்’ படமும் காடு, பழங்குடி மக்கள் பற்றிய படமாக உருவாகி வருகிறது. விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா சாய்கல், வருண், தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இன்று ‘வனமகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படம் ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைத்திருக்கும் 50வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘மின்னலே’ படத்தின் மூலம் தனது இசையைப் பயணத்தைத் துவங்கிய ஹாரிஸ் ஜெயராஜின் 25வது படமாக அமைந்தது விஷால் நடித்த ‘சத்யம்’ திரைப்படம்.

#HarrisJayaraj #Vanamagan #JayamRavi #Vishal #Sathyam #Madhavan #Minnalae #ALVijay #Kadamban #Arya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;