சீனுராமசாமி சிபாரிசில் பிரஜன் நடிக்கும் படம்!

சீனுராமசாமி உதவியாளர் தயா இயக்கும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’

செய்திகள் 10-May-2017 11:36 AM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமியிடம் உதவியாளராக இருந்த தயா இயக்கும் படம் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’. இந்த கதையில் விஜய்சேதுபதி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர் தயா அதற்கான முயற்சிகளை செய்துள்ளார். ஆனால் தயாவின் முயற்சிகள் கைக் கூடாமல் போகவே இந்த கதைக்கு பிரஜன் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் சீனுராமசாமி சிபாரிசு செய்துள்ளர். அதனை தொடர்ந்து இப்போது பிரஜனை கதாநாயகனாக நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் தயா. சில நிஜ சம்பவங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தயார் கூறி உள்ளார். இந்த படத்தில் பிரஜனுடன் கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த ரியாமிகா நடிக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், இமான் அண்ணாச்சி, ஷகீலா முதலானோரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை தொடர்ந்து பிரஜன் நடிக்கும் படம் இது.

#Prajin #SeenuRamasamy #Daya #VijaySethupathi #Dhanush #Riyamika #ImmanAnnachi #PazhayaVannarapettai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;