‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதனை வியக்க வைத்த படம்!

‘முன்னோடி’ படத்தை பார்த்து வியந்தேன்; விநியோக உரிமையை வாங்கினேன்! – ‘ எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன்

செய்திகள் 27-May-2017 10:57 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் S.P.T.A.குமார் இயக்கியுள்ள படம் முன்னோடி. ஸ்வஸ்திக் சினிவிஷன் சார்பில் சோஹன் அகர்வால், எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் ஹரிஷ், யாமினி பாஸ்கர் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் அர்ஜுனா, வினு கிருத்திக் நிரஞ்சன், சுமன், சுரேஷ், பாண்டியன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்தை வாங்கியதற்கான காரணம் குறித்து ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் பேசும்போது, "ஒரு நண்பர் இந்த படத்தை வெளியிடுவது குறித்து பேசினார். ஏற்கெனவே என் தயாரிப்பில் மூன்று படங்கள் போய் கொண்டிருக்கிறது. வேண்டாம் என்றேன். வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள் விட்டு விடுங்கள் என்றேன். பாடல்கள் ,டிரைலரையாவது பாருங்கள் என்றார்கள் .வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் இந்த படத்தில் இடம் பெறும் 'அக்கம் பக்கம் 'பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. இயக்குனரிடம் யாரிடம் வேலை பார்த்தீர்கள்? என்றேன். இல்லை என்றார். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் படத்தை எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த ‘முன்னோடி’ படம் என்னை வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம்’’ என்றார்.

அதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் பேசும்போது, "நான் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன்.

அப்போது என்னை சினிமாவில் விடவில்லை. இப்போது நானே சம்பாதித்து என் பணத்தில் படம் எடுத்திருக்கிறேன். இப்போதும் கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். நல்ல வேளை படத்தை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் சார் பார்த்தார். படத்தை பார்த்து வெளிட முன்வந்தார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

#MunnodiMoviePressMeet #Munnodi #SPTAKumar #PMadhan #EscapeArtist #Madhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர்


;