சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரனி’ன் 3வது நாயகி?

மகிமா, சனுஷா ஆகியோரைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் 3வது நாயகி?

செய்திகள் 29-May-2017 6:33 PM IST Chandru கருத்துக்கள்

‘குட்டிப்புலி’யைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு மே 10ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் நாயகிகளாக ஏற்கெனவே மகிமா நம்பியார், சனுஷா ஆகியோர் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது மூன்றாவது நாயகியாக பூர்ணாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சசிகுமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்திற்காக ராஜு சுந்தரம் மாஸ்டரின் நடன இயக்கத்தில் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்துள்ளது.

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் பத்தாவது படமாக உருவாகும் ‘கொடிவீரனி’ல் பால சரவணனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

#KodiVeeran #Sasikumar #Muthaiah #MahimaNambiar #Sanusha #Poorna #CompanyProduction #KuttyPuli #SRKathir

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் டீஸர்


;