கௌதம் கார்த்திக்கின் ‘ரங்கூன்’ சென்சார் ரிசல்ட்!

கௌதம் கார்த்திக், சனா இணைந்து நடிக்கும் ரங்கூன் படத்திற்கு  ‘U/A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 2-Jun-2017 12:48 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ள ‘ரங்கூன்’ திரைப்படம் வருகிற 9ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் சென்சார் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் ‘ரங்கூன் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கியுள்ள ‘ரங்கூன்’ படத்திற்கு விஷால் சந்திரசேகர், விக்ரம் இருவர் இசை அமைத்திருக்கிறார்கள். பர்மா – சென்னை பின்னணியில் நடக்கும் தங்கம் மற்றும் பணம் கடத்தல் பற்றிய கதை ‘ரங்கூன்’ என்று கூறப்படுகிறது.

#Rangoon #GauthamKarthik #Sana #RajkumarPeriyasamy #VishalChandrasekar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;