‘கொடி வீரனு’டன் மோதும் ‘மதயானைக் கூட்டம்’ இயக்குனர்!

சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடிக்க ‘மதயானைக் கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் ஒப்பந்தம்

செய்திகள் 5-Jun-2017 11:11 AM IST Chandru கருத்துக்கள்

மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா என மூன்று கதாநாயகிகளுடன் சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தை ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கி வருகிறார். மே 10ஆம் தேதி முதல் நடந்துவரும் படப்பிடிப்பு தற்போது அய்யனார் குளம் என்ற ஊரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் சசிகுமார்.

மூன்று நாயகிகளில் மகிமா நம்பியார் சசிகுமாரின் ஜோடியாக நடிக்க, சசியின் தங்கையாக சனுஷா நடிக்கிறாராம். சசிகுமாரின் சொந்தக்காரப் பெண்ணாகவும், பூர்ணா திருப்புமுனை கேரக்டர் ஒன்றில் நடிக்கிறாராம். சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் பத்தாவது படமாக உருவாகும் ‘கொடிவீரனி’ல் பால சரவணனும், விதார்த்தும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

#Sasikumar #KodiVeeran #Muthaiah #VikramSukumaran #MadhaYaanaiKoottam #MahimaNambiar #Poorna #Viddarth #Sanusha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;