விதார்த்துக்கு 4 பட வாய்ப்புகளை பெற்றுத்தந்த ‘குரங்கு பொம்மை’

பாரதிராஜாவுக்கு ‘குரங்கு பொம்மை’ தேசிய விருது பெற்றுத்தரும்! – விதார்த் பேச்சு!

செய்திகள் 5-Jun-2017 11:27 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விதார்த் பேசும்போது,

‘‘நித்திலன் இயக்கத்தில் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. நான் இந்த படத்தில் நடிக்க துவங்கிய நேரத்தில் எனக்கு மேலும் நான்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் இது எல்லாம் அமைய நித்திலனும், ‘குரங்கு பொம்மை’யும் தான் காரணம்! இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் அவருடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் அவரது காட்சிகள் படப்பிடிப்பு நடக்கும்போது அருகில் நின்று கவனிப்பேன். இயக்குனர் இமயம் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த படம் தேசிய விருது வாங்கி தரும் என்பது என் நம்பிக்கை! இந்த படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கும் ஒரு படத்திலும் நான் நடிக்கிறேன். ‘குரங்கு பொம்மை’ படம் சிறப்பாக உருவாக என் நண்பர்கள் கண்ணன் மற்றும் கர்ணா ராஜா மிக முக்கிய காரணம். அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்!

தொடர்ந்து படத்தின் கதாநாயகி டெல்னா டேவிஸ் பேசும்போது, ‘நம்
ஸ்காரம்’ என்று சொல்லி பேச ஆரம்பித்தார். நான் ஏன் முதலில் மலையாளத்தில் ‘நமஸ்காரம்’ சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் நான் எவ்வளவு காலம் சினிமாவில் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம். இல்லை கிரிமினல் லாயர் ஆகலாம். அதுவும் இல்லை என்றால் உங்களை மாதிரி பத்திரிகையாளர் ஆகலாம். ஏனென்றால் எனக்கு அதில்தான் விருப்பம். ஆனால் இனி நான் ‘குரங்கு பொம்மை’ கதாநாயகி என்று தான் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை இந்த படம் வாங்கி தரும்’’ என்று டெல்னா டேவிஸ் வெளிப்படையாக பேசினார்.

‘ஸ்ரேயாஸ்ரீ மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் அஜ்னீஷ் லோகநாத் இசை அமைத்துள்ளார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘குரங்கு பொம்மை’ படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

#BharathiRaja #Vidharth #KEGnanavelraja #PLThenappan #DelnaDavis #Kumaravel #AjaneeshLoknath #Nithilan #RParthiban #SVeSekar #Dharani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;