பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தயாரிப்பாளர்!

’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ பட விழாவில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு தங்க மோதிரம் பரிசளித்த தயாரிப்பாளர் டி.சிவா!

செய்திகள் 24-Jun-2017 12:24 PM IST VRC கருத்துக்கள்

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. ஓடம் இளவரசு இயக்கியுள்ள இந்த படத்தில் அத்ரவா கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்டரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுத, டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, டி.சிவாவின் அடுத்த தயாரிப்பான ‘பார்ட்டி’ பட அறிவிப்பு நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்திற்கு சிறப்பாக பாடல்கள் எழுதியமைக்காக டி.சிவா யுகபாரதிக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். டி.இமானுக்கு நினைவு பரிசு வழங்கினார். இந்த விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

அப்போது இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘‘இந்த படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என்ற தலைப்பு சுத்த தமிழில் இருக்கிறது. இந்த தலைப்பை ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘GGSR’ என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது தவறாகும். வரிவிதிப்புக்காக மட்டும் தமிழில் பெயர் வைக்கக் கூடாது. தமிழின் மேல் நாம் பற்றுக்கொண்டு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும். அப்போது தான் தமிழ் நிலைத்து நிற்கும். எல்லோரும் தங்களது படத்துக்கு தமிழில் பெயரை சூட்ட வேண்டும்.

தயாரிப்பாளர் டி.சிவா இசை அமைப்பாளர் டி.இமானுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம். கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி கொள்ளுங்கள்! ஏனென்றால் நான்கு கதாநாயகிகளுடன் டி.இமான் இருக்கும் படத்தை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. அதற்கே சம்பளம் சரியாகி விட்டது. டி.இமான் இசையில் ‘ஓடம்’ இளவரசு இயக்கியுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்பது என் நம்பிக்கை’’ என்றார் ஆர்.கே.செல்வமணி!

#GeminiGanesanumSuruliRajanum #Atharva #ReginaCassandra #AmmaCreations #TSiva #NivethaPethuraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டு பிடிக்க உத்தரவு ட்ரைலர்


;