வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர் விமர்சனம்

பாடல்களும், மோதல் காட்சிகளும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ நிச்சயம் நினைத்த வெற்றியைப் பெறும்

கட்டுரை 27-Jun-2017 11:32 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பதால் ‘விஐபி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பிருப்பது உண்மை. கேரக்டர்களாக கஜோல், ரீது வர்மாவைத் தவிர்த்து முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோர் இதிலும் தொடர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டாம்பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் என்ன மாதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

டிரைலரைப் பார்த்ததும் தோன்றும் முதல் விஷயம்.... கதையாக இந்த இரண்டாம்பாகத்தில் புதிய விஷயம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை என்பதுதான். காரணம்.... இந்த இரண்டாம்பாகத்தில் மீண்டும் தனுஷ் வேலையில்லா பட்டதாரி ஆகிறார். பின்னர் சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்குகிறார்... வழக்கம்போல் இடையில் ஒரு வில்லன்... அவர் ‘கஜோல்’! முதல்பாகத்தில் தனுஷை உருகி உருகி காதலித்த அமலாபால் இந்த பாகத்தில் மனைவியாக அவரை டார்ச்சர் செய்கிறார். இடையிடையே விவேக்கின் காமெடி கலாட்டாக்கள், ஆங்காங்கே சமுத்திரக்கனியின் அப்பா அறிவுரைகள் என ஆக மொத்தம், கதைக்களம் என்பது முதல் பாகத்தைப்போலவேதான் இதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும், இந்த டிரைலர் சுவாரஸ்யமாகவே இருக்கிறது என்பதுதான் ‘விஐபி 2’வுக்கான பலம். காதல் என்று பெரிதாக எதுவும் இல்லாததால், இளைஞர்களைவிட பெண்களையும், குடும்ப ரசிகர்களையும் இந்த பாகம் பெரிதாகக் கவர வாய்ப்புள்ளது.

கஜோலுக்கு பெரிய ஓபனிங் ஷாட் ஒன்றை டிரைலரில் காட்டியிருந்தாலும், அது பெரிதாக நம்மை கவரவில்லை. அவருக்கும், தனுஷுக்குமான மோதல் காட்சிகள் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கஜோல் பெரிய அப்ளாஸ்களைப் பெறுவார். முதல் பாகத்தின் வெற்றிக்கு பெரிதாக உறுதுணையாக இருந்த அனிருத்தின் தீம் மியூசிக்கையே சாமர்த்தியமாக பின்னணிக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதும், தனக்கு கிடைத்த இடத்தில் அற்புதமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஷான் ரோல்டன். சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு அற்புதமாக பிரதிபலிதிருக்கிறது.

பாடல்களும், மோதல் காட்சிகளும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ நிச்சயம் நினைத்த வெற்றியைப் பெறும். புதுவிதமாக யோசிக்காமல் பழைய டிராக்கிலேயே மீண்டும் பயணித்திருப்பதிலிருந்தே தெரிகிறது... தனுஷ் படத்தின் மீது எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறாரென்று. அவரின் நம்பிக்கை வீண்போகாது என்றே நம்புவோம்!#VIP2 #VelaillaPattadhaari2 #Dhanush #Kajol #AmalaPaul #Samuthirakani #SeanRolden #WunderbarFilms #KalaipuliSThanu #VIP2TrailerReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலா ட்ரைலர்


;