‘பண்டிகை’ இன்னும் 4 படங்களை தயாரிக்கும் உற்சாகத்தை தந்துள்ளது! - விஜயலட்சுமி

நடிகை விஜயல்ட்சுமி தயாரிப்பில் கிருஷ்ணா, ஆனந்தி நடித்துள்ள பண்டிகை ஜூலை 7-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 29-Jun-2017 10:06 AM IST VRC கருத்துக்கள்

‘டீ டைம் டாக்கீஸ்’ சார்பில் நடிகை விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

‘‘பருத்தி வீரனு’க்கு பிறகு நல்ல படம் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் இருந்து வரும் எனக்கு ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்தது. அதனால் இப்படத்தில் நடித்தேன்’’ என்றார் சரவணன்

‘‘பண்டிகை’ படத்தின் போஸ்டர், மற்றும் டீசர் பார்த்தவுடன் தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்துடன் என் பயணத்தை துவக்கினேன். படத்தை வாங்கும் போது யாரும் போட்டுக் காட்ட தயங்குவார்கள். ஆனால் விஜயலக்‌ஷ்மி, ஃபெரோஸ் படத்தை போட்டுக்காட்டி, என் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டனர். கிருஷ்ணாவின் கேரியரில் ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ படங்கள் என்ன பெயரை பெற்றுத் தந்ததோ அதை இந்த படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். இந்த படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம்’’ என்றார் இந்த படத்தை வெளியிடும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ்.

‘‘முதலில் ஃபெரோஸ் வேறு ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தமாகி இருந்தார். எனக்கு பொறாமையாக இருந்தது. அப்புறம் தான் ஒரு நாள் விஜயலக்‌ஷ்மி என்னை ஹீரோவாக நடிக்க கூப்பிட்டார். என் வாழ்க்கையில் முதல் முறையாக முதல் பாதி கதையை இயக்குனர் ஃபெரோஸ் சொன்னார், இரண்டாம் பாதியை தயாரிப்பாளர் விஜயலக்‌ஷ்மி சொன்னார். சிக்ஸ் பேக் எதுவும் வைக்க தேவையில்லை என ஃபெரோஸ் சொன்னார். வழக்கமாக நடிப்பது மாதிரி நடிக்க கூடாது என என்னை ரொம்ப டார்ச்சர் செய்து விட்டார். விஷ்ணுவர்தனுக்கு பிறகு என்னை அதிகம் டார்ச்சர் செய்தது ஃபெரோஸ் தான்’’ என்றார் கதாநாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணா!

‘‘நான் நடிக்க போகிறேன் என்று சொன்ன போது என் குடும்பம் உட்பட எல்லோரிடத்திலும் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், படம் தயாரிக்கப் போகிறேன் என்றதும் எல்லோரும் வேண்டாம் என அறிவுரை கூறினர். கிருஷ்ணா என் நண்பர். படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். கேரவன் கூட போகாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறான். இந்த சினிமாவுக்கு உயிர் கொடுத்திருப்பவர் ஆரா சினிமாஸ் மகேஷ் தான். இந்த பட ரிலீசுக்கு பிறகு இன்னும் 4 படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது’’ என்றார் தயாரிப்பாளரும், நடிகையும், இயக்குனர் ஃபெரோஸின் மனைவியுமான விஜயல்டசுமி!

‘‘நிறைய ஹீரோக்களிடம் கதையை சொல்லியிருக்கிறேன். எல்லாம் ஓகே ஆனாலும் படத்தை தொடங்கவே முடியவில்லை. அப்போது தான் படத்தை நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் தான் இந்த கதைக்கு வேண்டும் என முன்பே முடிவு செய்தேன், அது சாத்தியமானது. தெரு சண்டையை மையமாக கொண்ட கதை என்பதால் ஸ்டண்ட் மாஸ்டரின் வேலை ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. அதை அன்பறிவ் சிறப்பாக செய்து கொடுத்தனர். படத்தை முழுதாக பார்ப்பதற்கு முன்பே நம்பிக்கை வைத்து ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த ஆரா சினிமாஸ் மகேஷ் சாருக்கு நன்றி’’ என்றார் இயக்குனர் ஃபெரோஸ்.

#PandigaiPressMeet #Pandigai #Krishna #Feroz #Vijayalakshmi #Anandhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்


;