‘முரண்’ இயக்குனரின் புதிய படம்?

‘முரண்’ படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கத்தில் ‘கட்டம்’ என்ற புதிய படம் தயாராகி வருகிறது

செய்திகள் 30-Jun-2017 10:25 AM IST Chandru கருத்துக்கள்

பிரசன்னா, சேரன் நடித்த ‘முரண்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜன் மாதவ். விமர்சனரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார் ராஜன் மாதவ். க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் அறிமுகம் நந்தன், நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ஷிவதா நாயர் நாயகியாக நடித்துள்ளார். ராஜன் மாதவின் மனைவி சந்த்யா ஜனா இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரு கட்டிடத்திற்குள் மாட்டிக்கொள்ளும் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள், அதிலிருந்து எப்படி வெளியே வருகின்றன என்பதை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர் ராஜன் மாதவ். சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறதாம்.

நவீன், ஜேசி பால் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவை டேமெல் ஜேவியர் எட்வர்ட்ஸும், எடிட்டிங்கை கேஜே வெங்கடரமணனும் செய்துள்ளனர்.

#Muran #Cheran #Prasanna #RajanMadhav #Naveen #JCPaul #KJVenkataramanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;