இயக்குனர் கண்ணன் கண்ணீர் வேண்டுகோள்!

சினிமா காட்சிகள் ரத்து - ‘இவன் தந்திரன்’ இயக்குனர்  கண்ணன் கண்ணீர் வேண்டுகோள்!

செய்திகள் 1-Jul-2017 2:30 PM IST Top 10 கருத்துக்கள்

கண்ணன் இயக்கத்தில் நேற்று வெளியாகிய படம் ‘இவன் தந்திரன்’. கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி முதலானோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அதிகபடியான ஜி.எஸ்.டி வரி மற்றும் மாநில அரசின் வரி விதிப்புக்கு எதிராக தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திங்கட் கிழமை முதல் தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இதனால் ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனர் கண்ணன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் கண்ணன் கண்ணீர் மல்க ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
‘‘எல்லோருக்கும் வணக்கம்! முதலில் மன்னிக்கவும்! என்னால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை! நான் இயக்கிய ‘இவன் தந்திரன்’ படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் திங்கட் கிழமை முதல் அனைத்து திரையரங்குகளிலும் சினிமா காட்சிகளை ரத்து செய்வதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் இப்படி காட்சிகள் ரத்து என்று அறிவித்தால் எப்படி? எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! படத்திற்காக நான் வாங்கிய கடனை எப்படி அடிக்கிறது? எனக்கிருக்கும் ஒரே ஆதரவு இயக்குனர்கள் சங்கம் தான். ஒரு தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த ஒரு குழந்தையை உடனே கழுத்தை அறுத்து விடுவது மாதிரியான வலி தான் வருகிறது. அந்த வலியை தாங்கி கொள்ள முடியவில்லை! ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்த படம் தொடர்ச்சியாக திரையரங்குகளில் ஓடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று அதில் கண்ணீர் மல்க பேசியுள்ளார் இயக்குனர் கண்ணன்!

#IvanThanthiran #RKannan #Settai #GauthamKarthick #ShraddhaSrinath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - டீஸர்


;