விதவிதமான லொகேஷன்களில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் ‘96’

விதவிதமான லொகேஷன்களில் படமாகி வரும் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் ‘96’ படப்பிடிப்பு!

செய்திகள் 12-Jul-2017 3:04 PM IST VRC கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’, ‘கத்திச்சண்டை’ முதலான படங்களை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘96’. விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் இந்த படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் கும்பகோணத்தில் துவங்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்த லொகேஷன்கள் தவிர வேறு சில லொகேஷன்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும் விஜய்சேதுபதி இதுவரை நடித்து வெளிவந்த படங்களின் படப்பிடிப்பு இவ்வளவு வேறுபட்ட இடங்களில் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தின் படப்பிடிப்பு விதவிதமான லொகேஷன்களில் நடைபெறவிருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ‘96’ ஒரு டிராவல் ஸ்டோரியாக இருப்பதால் இவ்வளவு லொகேஷன்கள் தேவைப்படுகிறது என்கிறார் இயக்குனர் பிரேம்குமார். இந்த படத்தின் ஒளிப்பதிவை சண்முகசுந்தரம் கவனிக்க, கோவிந்த் மேனன் இசை அமைக்கிறார்.

#96 #VijaySethupathi #Trisha #MadrasEnterprises #RomeoJuliet #KaththiSandai #Premkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;