சோனியிடம் தானா சேர்ந்த கூட்டம்!

அனிருத் இசை அமைப்பில், சூர்யா நடிக்கும்  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஆடியோ ரைட்ஸை கைபற்றிய சோனி!

செய்திகள் 14-Jul-2017 10:54 AM IST VRC கருத்துக்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிக விரைவில் முடிவடையவிருக்கிறது. சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது. சூர்யாவுடன் முதல்முறையாக இணைந்திருக்கும் அனிருத், முதல்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், காமெடிக்கு செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், ஆனந்த் ராஜ், கோவை சரளா என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்து வரும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை முன்னணி நிறுவனமான சோனி வாங்கியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகவிருக்கிறது. சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம்!

#SonyMusic #NaanumRowdyDhaan #VigneshShivn #Anirudh #KeerthySuresh #Suriya #SureshMenon #RamyaKrishnan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நடிகையர் திலகம் டீஸர்


;