அறிவு, ஆதி, மிருணாளினி, கஸ்தூரி - இது ‘வேலைக்காரன்’ லிஸ்ட்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படம் பற்றிய புதிய தகவல்கள்

செய்திகள் 14-Jul-2017 11:27 AM IST Chandru கருத்துக்கள்

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறது சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 5ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. சமூகப்பொறுப்புள்ள ஒரு நாயகனின் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் அறிவு என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படிப்பறிவு, வசதி, சொந்த பந்தம் என எதுவுமில்லாத அறிவு கேரக்டர் ஒரு சேரிப்பகுதியின் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றிற்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பதே படத்தின் கதைக்களமாம்.

நாயனுக்கு இணையான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ‘வேலைக்காரன்’ படத்தில் ஆதி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் அவர் வில்லனா? அல்லது நல்லவரா? என்பது சஸ்பென்ஸாக இருந்தாலும், ‘ஆதி’ கேரக்டருக்கு தன் சொந்த வாய்ஸிலேயே ஃபஹத் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. அறிவு, ஆதி என்ற பெயர்களோடு வேறு பெயர்களும் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவா, ஃபஹத் கேரக்டர்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல்.

‘தனி ஒருவன்’ படத்தில் மித்ரா என்ற கேரக்டரில் நடித்து அசத்திய நயன்தாராவிற்கு ‘வேலைக்காரன்’ படத்தில் மிருணாளினி கேரக்டர். அதேபோல், மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘அனுமான் ஜெயந்தி’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்த சினேகா, 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் ராஜாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் கஸ்தூரி என்ற திருப்புமுனை கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளாராம்.

#Velaikkaran #Sivakarthikeyan #Nayanthara #Sathish #MohanRaja #Anirudh #24AMStudios #RDRaja #Remo

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் டீஸர் - 3


;