6 ஆண்டுகளுக்கான தமிழக அரசு விருதுகள்!

சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு!

செய்திகள் 14-Jul-2017 12:32 PM IST VRC கருத்துக்கள்

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. கடைசியாக 2008-ஆம் அண்டுக்கான விருதுகள் வழங்கியதோடு அதன் பிறகு விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் 6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. ஆண்டு வாரியாக விருதுக்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் மற்றும் முக்கிய கலைஞர்களின் விவரங்கள் வருமாறு:

2009-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம்: பசங்க, சிறந்த நடிகர் : கரண் (மலையன்), சிறந்த நடிகை : பத்மபிரியா (பொக்கிஷம்), சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு), சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : அஞ்சலி (அங்காடி தெரு), சிறந்த வில்லன் நடிகர் : பிரகாஷ்ராஜ் (வில்லு), சிறந்த நகைச்சுவை நடிகர் : கஞ்சா கருப்பு (மலையன்), சிறந்த இயக்குனர் : வசந்தபாலன் (அங்காடித் தெரு), சிறந்த இசை அமைப்பாளர்: சுந்தர்.சி.பாபு (நாடோடிகள்)

2010-ஆம் ஆண்டுக்கான விருதுகள்!

சிறந்த படம் : மைனா, சிறந்த நடிகர் : விக்ரம் (இராவணன்), சிறந்த நடிகை அமலாபால் (மைனா), சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : ஒய்.ஜி.மகேந்திரன் (புத்ரன்), சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : சங்கீதா (புத்ரன்), சிறந்த வில்லன் நடிகர் : எஸ்.திருமுருகன் (களவாணி), சிறந்த நகைச்சுவை நடிகர் : தம்பி ராமையா (மைனா), சிறந்த குணச்சித்திர நடிகர் : சமுத்திரக்கனி (ஈசன்), சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா பொன்வண்ணன் (களவாணி), சிறந்த இயக்குனர் : பிரபு சாலமன் (மைனா), சிறந்த இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா (பையா).

2011-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : வாகை சூடவா, சிறந்த நடிகர் : விமல் (வாகைசூடவா), சிறந்த நடிகை : இனியா (வாகைசூடவா), சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : சிவகார்த்திகேயன் (மெரினா), சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : அனுஷ்கா (தெய்வத் திரும்கள்), சிறந்த வில்லன் நடிகர் : பொன்வண்ணன் (வாகைசூடவா), சிறந்த நகைச்சுவை நடிகர் : மனோபாலா (பல படங்கள்), சிறந்த நகைச்சுவை நடிகை : தேவதர்ஷினி (காஞ்சனா), சிறந்த குணச்சித்திர நடிகர் : நாசர் (தெயவத் திருமகள்), சிறந்த குணச்சித்திர நடிகை : லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்), சிறந்த இயக்குனர் : விஜய் (தெய்வத் திருமகள்), சிறந்த இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (கோ).

2012-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : வழக்கு எண் 18/9, சிறந்த நடிகர் : ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்), சிறந்த நடிகை : லட்சுமி மேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்), சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : விக்ரம் பிரபு (கும்கி), சிறந்த நகை - சிறப்பு பரிசு : சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்), சிறந்த வில்லன் நடிகர் : விஜய்சேதுபதி (சுந்தரபாண்டியன்), சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (மனம் கொத்தி பறவை), சிறந்த நகைச்சுவை நடிகை : ஆர்த்தி (பாரசீக மன்னன்), சிறந்த குணச்சித்திர நடிகர் : நரேன் (மனம் கொத்தி பறவை), சிறந்த குணச்சித்திர நடிகை : ரேவதி (அம்மாவின் கைபேசி), சிறந்த இயக்குனர் : பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), சிறந்த இசை அமைப்பாளர் : டி.இமான் (கும்கி).

2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : ராமானுஜன், சிறந்த நடிகர் : ஆர்யா (ராஜா ராணி), சிறந்த நடிகை : நயன்தாரா (ராஜா ராணி), சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : விஜய்சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும் மற்றும் இதற்குதானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா), சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : நஸ்ரியா (நேரம்), சிறந்த வில்லன் நடிகர் : விடியல் ராஜ் (ஆள்), சிறந்த் நகைச்சுவை நடிகர் : சத்யன் (ராஜா ராணி), சிறந்த நகைச்சுவை நடிகை : துளசி (பண்ணையாரும் பத்மினியும்), சிறந்த இயக்குனர் : ராம் (தங்கமீன்கள்), சிறந்த இசை அமைப்பாளர் : ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்).

2014-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : குற்றம் கடிதல் , சிறந்த நடிகர் : சித்தார்த் (காவியத்தலைவன்), சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை), சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா), சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : ஆனந்தி (கயல்), சிறந்த வில்லன் நடிகர் :பிருத்திவிராஜ் (காவியத்தலைவன்), சிறந்த நகைச்சுவை நடிகர் : கே.ஆர்.சிங்கமுத்து (பல்வேறு படங்கள்), சிறந்த குணச்சித்திர நடிகர்: நாசர் (காவியத்தலைவன்), சிறந்த குணச்சித்திர நடிகை : குயிலி ( காவியத்தலைவன்), சிறந்த இயக்குனர் : ராகவன் (மஞ்சப்பை), சிறந்த இசை அமைப்பாளர் :
ஏ.ஆர்.ரஹ்மான் (காவியத்தலைவன்).

இந்த விருதுகள் அறிவிப்புடன் 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும், 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சின்னத்திரையில் சிறந்த தொடர்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளும், 2007-ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மானியம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட 149 திரைப்படங்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது பெற தேர்வாகியுள்ல அனைத்து கலைஞர்களுக்கும் டாப்10 சினிமா தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

#Vikram #Myna #Kumki #Naadodigal #YuvanShankarRaja #VaagaiSoodaVaa #Sivakarthikeyan #Kanchana #VikramPrabhu #ARRahman #HarrisJayaraj #Jiiva #LakshmiMenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;