‘ஒரு குப்பை கதை’யை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஒரு குப்பை கதை’

செய்திகள் 15-Jul-2017 11:07 AM IST VRC கருத்துக்கள்

‘ஃபிலிம் பாக்ஸ்’ நிறுவனம் சார்பாக இயக்குனர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில், நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு குப்பை கதை’. ‘பாகன்’ படத்தை இயக்கியவர் அஸ்லம். இவரிடமும், இயக்குனர் எழிலிடமும் உதவியாளராக பணி புரிந்தவர் காளி ரங்கசாமி. அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை பேசும் படமாம் ஒரு குப்பை கதை. இந்த படத்தை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டு காட்டியுள்ளனர் படத்தின் இயக்குனர் காளிரங்கசாமி மற்றும் தயாரிப்பாளர் அஸ்லம். ‘ஒரு குப்பை கதை’யை பார்த்ததும் இந்த படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறினாராம் உதயநிதி ஸ்டாலின்! இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட முன் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்கின்றனர் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும்!

ஒரு குப்பை கதை படத்தில் மாஸ்டர் தினேஷுடன் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுகங்கள் சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் மற்றும் யோகி பாபு, ஜார்ஜ், ஆதிரா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

#OruKuppaiKathai #Dinesh #ManishaYadav #FilmBox #Aslam #Ezhil #UdhayanidhiStalin #RedGiantMovies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு குப்பைக் கதை - ட்ரைலர்


;