ஷாமுடன் ‘காவியன்’ படத்தில் இணைந்த ராகவா லாரன்ஸ்

ஷாம் நடிக்கும் ‘காவியன்’ படத்தின் மோஷன் போஸ்டரை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்!

செய்திகள் 15-Jul-2017 12:25 PM IST VRC கருத்துக்கள்

சாரதி இயக்கத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காவியன்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. ‘2M சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ஷாமுடன் ஆத்மியா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக ஜெஸ்டின் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஷ்யாம் மோகன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு என்.எஸ்.ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த பத்தின் தமிழ் மற்றும் தெலுக்கு மோஷன் போஸ்டரை இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். ‘காவியன்’ மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Kaaviyan #RaghavaLawrence #Shaam #Aathmika #Sarathy #2Mcinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;