பாலா தயாரிக்கும் ‘அகோரி’

பாலா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கும் அகோரி!

செய்திகள் 15-Jul-2017 4:03 PM IST VRC கருத்துக்கள்

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புலிமுருகன்’ படத்தை தமிழில் வழங்கியவர் ஆர்.பி.பாலா. இவர் தனது ஆர்.பி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘அகோரி’. அறிமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக சித்து நடிக்கிறார். இவருடன் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஆர்.பி.பாலா வசனம் எழுதுகிறார். ஆர்.ஷரவணகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் கே.கே. இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படத்துவக்க விழா இன்று காலை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.

#AgoriMovieLaunch #Agori #TSRajkumar #Sidhu #RBBala #SaravanaKumar #PrasadKK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;