‘ராட்ச்சசனா’கும் விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் பிறந்த நாள்! 4 பட விளம்பரங்கள்!

செய்திகள் 17-Jul-2017 11:18 AM IST VRC கருத்துக்கள்

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘கதாநாயகன்’. முருகானந்தம் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது. இன்று (ஜூலை-17) விஷ்ணுவிஷால் பிறந்த நாள் என்பதால் ‘கதாநாயகன்’ படத்தின் பாடல் ஒன்று வெளியாவதோடு அவர் நடித்து வரும் மற்ற 3 படங்களின் விளம்பரங்களை வெளியிட்டு அவருக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றனர். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிப்பில் ‘முண்டாசுபட்டி’ ராம் இயக்கும் படத்திற்கு ‘ராட்ச்சசன்’ என்று டைட்டில் சூட்டியுள்ளனர். அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விஷ்ணுவிஷாலுக்கு பெருமை சேர்த்துள்ள இப்படக் குழுவினர் இந்த படம் விரைவில் வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் ஜோடியாக நடிக்க, ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படம் தவிர கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், செந்தில் வீரசாமி இயக்கத்தில் விஷ்ணுவிஷால், தமன்னா இணைந்து நடிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்விருப்பதாக தங்களது விளம்பரத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த படங்கள் தவிர விஷ்ணுவிஷால் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இன்னொரு படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’.

இந்த பத்தை அறிமுக இயக்குனர் செல்லா அய்யாவு இயக்குகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ்காரராக நடிக்கிறார். விஷ்ணுவிஷால் தயாரிப்பில் உருவாகிவரும் கதாநாயகனை தொடர்ந்து விஷ்ணுவிஷால் தயாரிக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவிருக்கிறது. தான் நடிக்கும் 4 படங்களின் விளம்பரங்களை ஒரே நாளில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு அளித்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

#VishnuVishal #Kathanayagan #MaaveeranKittu #SeanRolden #AxessFilmFactory #Ratchazhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;