விதார்த், விஜய் வசந்த் இணையும் படம்!

விதார்த் விஜய் வசந்த இணைந்து நடிக்கும் ‘சீமத்தண்ணி’

செய்திகள் 17-Jul-2017 1:04 PM IST VRC கருத்துக்கள்

‘கிரேட் எம்பார் புரொடக்‌ஷன்ஸ்’ எனும் புதிய பட நிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘சீமத்தண்ணி’ என்று பெயரிட்டுள்ளனர். பல முன்னணி இயக்குனர்களிடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் துணை, இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் விதார்த், விஜய்வசந்த் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக சாந்தினி, சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். இவர்களூடன் ‘யோகி’ பாபு, ‘ஹலோ’ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘ரேஷன் கடையை தாய் வீடாக நினைத்து வாழும் 2 அனாதை நண்பர்களுக்கும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் தங்கமாரி எனும் கதாபாத்திரத்திற்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை பதிவுகள் தான் ‘சீமத்தண்ணி’ படம்’ என்கிறார் இயக்குனர் விஜய்மோகன்!
இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ‘மஞ்சள்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மசானி ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் திருமூர்த்தி இசை அமைக்கிறார். படத்தொகுப்பை சி.எஸ்.பிரேம்குமார் கவனிக்கிறார்.

#Viddarth #VijayVasanth #CPremkumar #Seemathanni

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ


;