‘ரெமோ’வை தொடர்ந்து மீண்டும் பி.சி.ஸ்ரீராம்!

சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து நிவில் பாலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்!

செய்திகள் 17-Jul-2017 1:06 PM IST VRC கருத்துக்கள்

‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரித்த சிவகார்த்திகேயனின் ’ரெமோ’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் பி.சி.ஸ்ரீராம்! இவர் இதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் ஒளிப்பதிவாளராக பணிபுரியவிருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ என்ற படத்தை தயாரித்துள்ள இந்த நிறுவனம் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கதை எழுதியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது. ‘ரெமோ’வை தொடர்ந்து இந்த படத்திற்கும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த தகவலை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமே தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதி செய்துள்ளார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வும் இப்போது நடந்து வருகிறது.

#PCSreeram #Remo #24AMStudios #Sivakarthikeyan #NivinPauly #RD Raja #Velaikkaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கல்யாண வயசு - கோலமாவு கோகிலா


;