‘கவண்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம்?

ஒரே நேரத்தில் மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் விக்ரம், அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம்

செய்திகள் 27-Jul-2017 12:46 PM IST Chandru கருத்துக்கள்

‘இருமுகன்’ தந்த உற்சாகத்தில் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக இயங்கி வருகிறார் விக்ரம். இதில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஸ்கெட்ச்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு முடிக்கும் தருவாயில் பயணித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் ‘சாமி 2’ படத்திற்கான வேலைகளும் துவங்கிவிடும்.

இந்நிலையில், 4வதாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவும் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாக சியான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கவண்’ படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபம் ஈட்டிக்கொடுத்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதற்கு விக்ரமும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்த காம்பினேஷன் குறித்து இருதரப்பிலும் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

#ChiyaanVikram #VijayChander #Sketch #DhruvaNatchathiram #Saamy2 #Hari #KVAnand #Kavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2


;