பாலாஜி சக்திவேலுடன் இணையும் ‘மாநகரம்’ இசை அமைப்பாளர்!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ’யார் இவர்கள்’

செய்திகள் 28-Jul-2017 10:31 AM IST VRC கருத்துக்கள்

’காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ முதலான படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘யார் இவர்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘மாநகரம்’ படத்திற்கு இசை அமைத்த ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவர்ன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன்… இவர்கள் தான் இந்த படத்தின் கதை நாயகர்கள். இதில் புதுமுகங்கள் இசக்கி கிஷோர், அஜய் மற்றும் சுபிக்ஷா, பாண்டியன், ராம் முதலானோர் நடிக்கிறார்கள். ‘சந்திரா ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.இசக்கிதுரை தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

#BalajiSakthivel #Kadhal #Kalloori #VazhakkuEn18/9 #JavedRiaz #YaarIvargal #Maanagaram #VijayMilton

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதலே காதலே வீடியோ பாடல் - '96


;