’ஜித்தன்’ ரமேஷுக்கு நண்பனாகும் ‘நண்டு’

’ஜித்தன்-2’ படத்தை தொடர்ந்து ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படத்திற்கு ‘நண்டு என் நண்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 28-Jul-2017 11:23 AM IST VRC கருத்துக்கள்

’ஜித்தன்-2’ படத்தை தொடர்ந்து ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படத்திற்கு ‘நண்டு என் நண்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் ஆடு, மாடு, குரங்கு, யானை, பாம்பு முதலான விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்கள் ஆகியிருக்கிறது. இப்போது ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் இந்த படத்தின் மூலம் நண்டு முக்கிய கதாபாத்திரமாகிறது. இந்த படத்தை ‘ஆசாமி’, ‘இன்னார்க்கு இன்னாரென்று’ ஆகிய படங்களை இயக்கிய ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ‘ஜித்தன்’ ரமேஷுக்கு ஜோடியாக பூனம் கௌர் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, சந்தான பாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். எஸ்.நாகராஜ் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தில் நண்டு தொடர்பான கிராஃபிக்ஸ் காட்சிகளை ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கிராஃபிக்ஸ் கலைஞர்கள் கவனிக்கவிருக்கிறார்களாம்.

#JithanRamesh #Nandu #Jithan2 #Jithan #AandalRamesh #PoonamKaur

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தட்றோம் தூக்றோம் டீஸர்


;