50 பேர் இணைந்து தயாரிக்கும் படம்!

’பூ’ ராமு முக்கிய பாத்திரத்தில் நடிக்க 50 பேர் இணைந்து தயாரிக்கும் படம்  ‘நெடுநல்வாடை’

செய்திகள் 28-Jul-2017 12:44 PM IST VRC கருத்துக்கள்

’பி-ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் 50 கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் படம் ’நெடுநல்வாடை’. ‘மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில் நம் மண் சார்ந்த, நம் கலாசாரத்தை பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த குறையை போக்கும் விதமான் ஒரு சிறு முயற்சியாக ‘நெடுநல்வாடை’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறேன் என்கிறார் செல்வகண்ணன். மேலும் படம் குறித்து இயக்குனர் செல்வகண்ணன் பேசும்பொது,

‘‘கிராமத்து பின்னணியில் ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையாமக வைத்து உருவாகும் திரைப்படம் இது. நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது. இந்த படத்தின் மைய பாத்திரத்தில் 70 வயது விவசாயியாக ‘பூ’ ராமு நடிக்கிறார். இவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை என்னுடன் நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த என் நண்பர்கள் 50 பேர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் கதை பிடித்துபோய் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் அனைத்துப் பாடல்களையும் எழுதி கொடுத்தது இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். இந்த படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். ஜோஸ் ஃபிராங்கிளின் இசை அமைக்கிறார். இந்த படத்தை அடுத்த மாகம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்!

#NedunalVaadai #Poo #Ramu #BStarProductions #Selvakannan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;