பிரியதர்சன், உதயநிதி படத்தின் புதிய தகவல்கள்!

’தெறி’யை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் இயக்குனர் மகேந்திரன்!

செய்திகள் 31-Jul-2017 1:57 PM IST VRC கருத்துக்கள்

பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. மலையாள ‘மகேஷின்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. உதயநிதியுடன் மலையாள நடிகை நமீதா பிரமோத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக, இரண்டாவது கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதோடு அவரே படத்திற்கு வசனமும் எழுதுகிறார். இவர்களுடன் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் மகேந்திரனும் நடிக்கிறார். விஜய்யின் ‘தெறி’யில் வில்லனாக நடித்த மகேந்திரன் அதற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த படத்திற்காக இயக்குனர் பிரியதர்சன் வடிவமைத்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே உடனே இதில் நடிக்க மகேந்திரன் ஒப்புக்கொண்டாராம். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மூன்லைட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் குருவிளா தயாரிக்கிறார்.

#UdhayanidhiStalin #Priyadharshan #Mahendiran #Theri #Vijay #DarbugaSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;