இறுதிகட்டத்தில் ‘மதுரவீரன்’

விஜயகாந்த் மகன் ஷண்முகபாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

செய்திகள் 31-Jul-2017 2:44 PM IST VRC கருத்துக்கள்

‘சகாப்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன். இவர் நடிக்கும் இரண்டாவது படம் ‘மதுரவீரன்’. இந்த படத்தை பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஷண்முகபாண்டியனுடன் கதாநாயகியாக புதுமுகம் மினாட்சி நடிக்கிறார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், பாலசரவணன், ‘நான் கடவுள் ராஜேந்திரன்’ ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் ’மதுரவீர்ன்’. இந்த படத்திற்கான பாடல்களை யுகபாரதி எழுத, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் மதுரையில் நடக்கவிருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் விஜய்காந்த் வெளியிட்டார்.

#Maduraveeran #Sagaptham #Shanmugapandian #Vijayakanth #VStudios #PGMUthaiah #Samuthirakani #MimeGopi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை ட்ரைலர்


;