சிவாஜிக்கு மெரினாவில் சிலை ! திரையுலகினர் கோரிக்கை!

சிவாஜிக்கு மெரினாவில் சிலை ! திரையுலகினர் கோரிக்கை!

செய்திகள் 12-Aug-2017 1:21 PM IST VRC கருத்துக்கள்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியின் சிலை நீதிமன்ற உத்தரவின் படி சமீபத்தில் அகற்றப்பட்டது. இந்த சிலையை சிவாஜிக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் நிறுவ தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கடற்கரை சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃப்ஃபெசி) தலைவர் இயக்குனர் செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் இயக்குனர் விக்ரமன் தலைமையில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள, தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஆர்.கே.செல்வமணி பேசும்போது,

‘‘நீதிமன்ற உத்தரவு படி சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியின் சிலை தமிழக அரசு அகற்றியுள்ளது. இது வருத்தத்துகுறிய விஷயமாகும். சென்னை கடற்கரை சாலையில் வேறு சிலைகள் இருக்கும் நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அகற்றப்பட்டுள்ளது. தமிழனாக பிறந்து, தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஒரு மகா கலைஞன் சிவாஜி. அப்படிப்பட்ட அந்த மகா கலைஞனின் சிலையை அங்கிருந்து அகற்றியிருப்பது சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தமிழக மக்களுக்கும் வேதனை தரும் விஷயமாகும். அதனால் அந்த கலைஞனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் விதமாக அவரது வெண்கல சிலையை மெரினாவில் எந்த ஒரு இடத்திலாவது மீண்டும் நிறுவ வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலையை, அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக கூறி அகற்றப்பட்டுள்ளது. அதனால் விபத்துக்கள், இடைஞ்லகள் ஏற்படாத ஒரு இடத்தை தேர்வு செய்து மீண்டும் நடிகர் திலகத்தின் சிலையை மெரினாவில் நிறுவ வேண்டும். இதனை தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் சார்பில் என்றில்லாமல் அனைத்து தமிழக மக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இயக்குனர்கள் சீமான், விக்ரமன், பேரரசு, ஆர்.வி.உதயகுமார் மற்றும் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர் அருள்பதி, இசை அமைப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோரும் பேசினார்கள்.

#SivajiGanesan #Marina #Selvamani #Vikraman #Seeman #Perarasu #RVUdhayakumar #FEFSIPressmeet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவகாமியின் செல்வன் - டிரைலர்


;